இஸ்லாத்தில் ஜாதி பற்றி பிரதமர் மோடி அவர்களுக்கு முஸ்லிம்கள் தெரிவித்த மறுப்பு

‌பிரதமர் மோடி அவர்கள் இஸ்லாம் பற்றி ஒரு விஷயத்தை வெளிப்படையாக சொல்லி இருக்கின்றார் ! அவர் சொல்லிய இந்த கருத்திற்கு இஸ்லாமியர்கள் பல்வேறு பதில்களை கொடுத்திருக்கின்றார்கள் அதைப்பற்றி தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்க போகின்றோம்.

பிரதமர் மோடி சொன்ன கருத்து

பிரதமர் மோடி அவர்கள் “இஸ்லாமிய மார்க்கத்தில் பல ஜாதிகள் இருக்கிறது. இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள ஜாதிகளை பற்றி யாரும் பேசுவது கிடையாது. மற்றவர்கள் இந்து மதத்தில் உள்ள ஜாதிகளை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் இந்துக்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் விரும்புகிறார்கள்”. என்பதாக மோடி அவர்கள் ஒரு விஷயத்தை பேசியிருக்கின்றார்.

இஸ்லாத்தில் ஜாதி பற்றி பிரதமர் மோடி அவர்களுக்கு முஸ்லிம்கள் தெரிவித்த மறுப்பு

இஸ்லாமியர்கள் தெரிவித்த மறுப்பு

பிரதமர் மோடி அவர்கள் இந்து மதத்தில் ஜாதிகள் இருக்கிறது என்று சொல்லுபவர்களுக்கு அப்படி இதுவும் கிடையாது ! இந்து மதத்தில் ஜாதிகள் இல்லை. வேதத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது ! புராணங்களில் இந்த விஷயங்கள் வருகிறது ! என்பதை சொல்லி மற்றவர்களுக்கு மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் இல்லாத ஒரு விஷயத்தை உண்மைப்படுத்துவதற்காக இஸ்லாமிய மார்க்கத்தில் ஜாதிகள் இருக்கிறது என்பதாக பொய்யை சொல்லி இருக்கின்றார். இஸ்லாமிய மார்க்கத்தில் ஜாதிகள் இல்லை ! என்பது உலகத்தில் உள்ள ஒவ்வொரு நபர்களுக்கும் தெரியும். குர்ஆன், ஹதீஸ் இந்த இரண்டும் அவற்றை உண்மைப்படுத்துகிறது .என்பதாக இஸ்லாமியர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கின்றார்கள்.

READ MORE: தர்காவை இந்து கோயிலாக மாற்றிய இந்துத்துவ இளைஞர்கள்

இஸ்லாத்தில் ஜாதி இருக்கிறதா

இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள முஸ்லிம்களை பல பெயர்களை சொல்லி அழைப்பதை கேள்விப்பட்டிருப்போம் அவை அனைத்தும் தொழில்கள் அடிப்படையில் வந்த பெயர்கள்.

லெப்பைகுர்ஆனை மனனம் செய்தவர்
ராவுத்தர்குதிரை வணிகம் செய்பவர்
பட்டாணிவடநாட்டில் பட்டான் என்ற கிராம உருது பேசக்கூடிய விவசாயிகள்
மறைக்காயர்படகு ஓட்டக் கூடியவர்
மாப்பிளகேரளாவை ஆட்சி செய்த அரசாங்கம் முஸ்லிம்கள்

எப்படி மருத்துவர்கள், இன்ஜினியர்கள், மெக்கானிக், கார்பென்டர் போன்ற தொழில் பெயர்கள் இருக்கிறதோ அது போல இதுவும் தொழில் பெயர்கள் தான்.

உலகத்தில் சுன்னத் ஜமாத் முஸ்லிம்கள், ஷியா முஸ்லிம்கள் என்ற இருவகையான முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இருவரும் கொள்கையில் மாறுபட்ட முஸ்லிம்களே தவிர மாறுபட்ட ஜாதியை சார்ந்த முஸ்லிம்கள் கிடையாது. இன்றும் மக்கா, மதினாவில் அனைத்து முஸ்லிம்களும் தோளோடு தோல் நின்று இறைவனை ஒன்றாக வழிபாடு செய்வதை நாம் கண்கூடாக பார்த்து வருகின்றோம். என்று இணையதளத்தில் இந்த விஷயத்தை பகிர்ந்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Sharing Is Caring:

Leave a Comment