பள்ளிவாசலில் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிடுவது அச்சுறுத்துதல் அல்ல – கர்நாடகா நீதிமன்றம்

பள்ளிவாசலில் “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷம் போட்ட மர்ம நபர்கள் . கர்நாடகா நீதிமன்றம் கொடுத்த பரபரப்பு தீர்ப்பு !

பள்ளிவாசலில் நடந்தது என்ன

போன வருடம் செப்டம்பர் மாதம் கர்நாடகா மாநிலம் தக்சின கன்னடா மாவட்டத்தில் ஒரு பள்ளிவாசலில் இரவு நேரத்தில் அதே பகுதியை சார்ந்த கீர்த்தன் குமார் மற்றும் சச்சன் குமார் என்ற இரண்டு நபர்கள் நுழைந்து “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷம் போட்டு இருக்கின்றார்கள்.

இதன் அடிப்படையில் மத ரீதியாக முஸ்லிம்களை அச்சுறுத்தும் விதமாக பேசியதாக அங்குள்ள காவல் நிலையத்தில் இவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.

READ MORE: பள்ளிவாசல் மீது செருப்பு வீச்சு ! உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் மதக் கலவரம்.

மத உணர்வுகளை புண்படுத்தும் படி நடத்தல் அத்துமீறி நுழைதல் போன்ற பிரிவுகளில் இவர்கள் இருவரின் மீதும் அங்குள்ள போலீசார் CCTV கேமராவில் பதிவாகியுள்ள வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றார்கள்.

கர்நாடகா நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி M. நாக பிரசன்னா பிரிவு 295A என்பது பிறருடைய மத உணர்வை புண்படுத்துவது, மத நம்பிக்கைகளை வேண்டுமென்றே அவமானப்படுத்துவது என்பதற்காக பதியப்படும் பிரிவு.

பள்ளிவாசலில் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிடுவது அச்சுறுத்துதல் அல்ல - கர்நாடகா நீதிமன்றம்

பள்ளிவாசலில் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டது மத உணர்வுகளை புண்படுத்தாது. ஏனென்றால் அந்த பகுதியில் வாழும் முஸ்லிம்களும், இந்துக்களும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். இப்படி இருக்கும்போது இந்த விஷயம் இரு பிரிவினருக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்தும் என்று கூற முடியாது.

என்று கர்நாடகா நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்த தீர்ப்பை வைத்து கர்நாடகாவில் பல விமர்சனங்கள் சொல்லப்பட்டு வருகிறது.

மக்கள் சொல்லும் கருத்து

பல இடங்களில் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லி தான் பள்ளிவாசலையும், முஸ்லிம்களுடைய சொத்துகளையும் சேதப்படுத்துகிறார்கள் அப்படி இருக்கும் போது ஒருவர் இரவு நேரத்தில் பள்ளிவாசலுக்குள் நுழைந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லுவது அச்சுறுத்தல் அல்ல என்று தீர்ப்பு வழங்குவது மிகவும் மோசமானது என்று அங்குள்ளவர்கள் பேசி வருகிறார்கள்.

Sharing Is Caring:

Leave a Comment